VELLINGIRI HILLS PILGIRIMAGE

VELLINGIRI HILLS -PILGIRIMAGE வெள்ளியங்கிரி மலை பாத யாத்திரை அனுபவம் முதல் மலையில் சிறிது தூரம் கடந்த பின்னர் களைப்படைந்து, என்ன மலை இது !!! இதில் எப்படி ஏறுவது !!! என்ற எண்ணம் வெள்ளிங்கிரி மலை ஏறும் பக்தர்களுக்கு முதலில் வருவது திண்ணமே. ஆனாலும் முயன்று முதல் மலையின் பாதியில் (குரங்குகள் அதிகம் உள்ள ) குரங்காட்டி பாலக்கட்டையில் அமர்ந்து இளைப்பருவோம் . பின்னர் மனதை திடப்படுத்திக் கொண்டு ஒருவழியாக மேலே ஏற துவங்குவோம் . ஏற ஏற மூச்சிறைத்து களைப்புறுவோம். மனதில், எங்கடா அந்த விநாயகர் கோவில் இருக்கு ? இன்னும் முதல் மலையே முடியலையா? என கேள்விகள் பல எழும். சரி வரும் என மீண்டும் மனதை திடப்படுத்தி, ஏறி வெள்ளை விநாயகர் மலையை அடைவோம். அங்கு ஒரிருபது நிமிடங்கள் அமர்ந்து மீண்டும் மலை ஏறுவோம் . வெள்ளிங்கிரி மலையானது கந்தக பூமி ஆகும். எனவே இங்கு வாழும் மனிதர்க்கு வழக்கத்தை காட்டிலும் உணவு அதிகம் தேவைப்படுகிறது. எனவே வெள்ளிங்கிரி மலையேறும் அனைத்து சிவ அன்பர்களுக்கும் என் சார்பில் சொல்ல விரும்புவது அதிகமான உணவுப்பண்டங்களை கையில் எடுத்து வாருங்களேன்று... ...