VELLINGIRI HILLS PILGIRIMAGE
முதல் மலையில் சிறிது தூரம் கடந்த பின்னர் களைப்படைந்து, என்ன மலை இது !!! இதில் எப்படி ஏறுவது !!! என்ற எண்ணம் வெள்ளிங்கிரி மலை ஏறும் பக்தர்களுக்கு முதலில் வருவது திண்ணமே. ஆனாலும் முயன்று முதல் மலையின் பாதியில் (குரங்குகள் அதிகம் உள்ள ) குரங்காட்டி பாலக்கட்டையில் அமர்ந்து இளைப்பருவோம் .
பின்னர் மனதை திடப்படுத்திக் கொண்டு ஒருவழியாக மேலே ஏற துவங்குவோம் . ஏற ஏற மூச்சிறைத்து களைப்புறுவோம். மனதில், எங்கடா அந்த விநாயகர் கோவில் இருக்கு ? இன்னும் முதல் மலையே முடியலையா? என கேள்விகள் பல எழும். சரி வரும் என மீண்டும் மனதை திடப்படுத்தி, ஏறி வெள்ளை விநாயகர் மலையை அடைவோம். அங்கு ஒரிருபது நிமிடங்கள் அமர்ந்து மீண்டும் மலை ஏறுவோம் .
வெள்ளிங்கிரி மலையானது கந்தக பூமி ஆகும். எனவே இங்கு வாழும் மனிதர்க்கு வழக்கத்தை காட்டிலும் உணவு அதிகம் தேவைப்படுகிறது. எனவே வெள்ளிங்கிரி மலையேறும் அனைத்து சிவ அன்பர்களுக்கும் என் சார்பில் சொல்ல விரும்புவது அதிகமான உணவுப்பண்டங்களை கையில் எடுத்து வாருங்களேன்று...
இவ்வுலகத்தை படைத்த பரமனே, நாம் பசியோடு அழைத்தால் வரமாட்டார்;
முதலில் நாம் நம் ஆத்மாவை திருப்தி படுத்தி கொள்ள வேண்டும் .
முதல் மலை ஏறும் போது ஏற்படும் உடல் வழிகளுக்கு காரணம் இப்பூவுலகில் நாம் செய்த கொடுமைகளே காரணம் என்கின்றனர் பொதுவாக. முதல் மலை ஏறி வெள்ளை விநாயகருக்கு மனதால் அர்ச்சனை செய்வதால் செய்த பாவங்கள் விடுபடுதலை அறியலாம். முதல் மலையானது சிவனின் பாதி காலாக கருதப்படுகிறது.
சிவன், சில குடும்பப் பிரச்சனைகளால் தன குடும்பத்தை பிறிய நேரிட்டது. அப்போது சிவனே தனிமை தேடி வந்து நின்ற மலை வெள்ளிங்கிரி மலை என்பது பெரியோர்கள் வழி அறிந்தது.
ஏழாம் மலையானது ஜடா முடி ஆகும். அதாவது சிவனின் தலை முடியாகும். பக்தர்கள் அப்பனின் தலை மீது நின்று யோகவோ ,தியானமோ செய்ய வேண்டாம். தியானம் அல்லது யோகா செய்ய என்னுபவர்கள் ஆறாம் மலையிலுள்ள அர்ச்சுனனின் தவக் குன்றில் செய்தல் உகந்தது.
ஆண்டி சுனையில் நீராடிய பின்னர் அர்ஜூனர் தவக் குன்றில் செய்யும் தவமானது உண்மையில் மனிதனின் ஏழு சக்கரங்களையும் இயக்கும் வல்லமையை உருவாக்கும்.
முதல் மலை முடிவாம், வெள்ளை விநாயகர் கோவிலை கடந்து இரண்டாம் மலையில் செல்லும் போது சிவனின் தொடையாம் வழுக்குப் பாறையை அடைவோம். இரண்டாம் மலையானது வழுக்குப் பாறையுடன் முடிகின்றது.
சிவனே அமைதியை தேடி வந்து அமர்ந்த மலை வெள்ளிங்கிரி ஆதலால் வெள்ளிங்கிரி செல்லும் சிவ அன்பர்கள் போகும் வழியில் வீண் சப்தம் செய்யாதீர்கள். இந்த வனமானது நம் வீடல்ல. யானைகள் ,புலிகள், நாகங்கள் எனப் பல்வேறு வகையினர் வாழும் ஒரு வீடு. எனவே காட்டிற்கு நாம் விருந்தினர்கள் ; அழைத்தவர் நம் அப்பன் சிவனே , அவரை தத்தம் மனக்குகையிலும், கண் குளிரக் காணவும் மட்டுமே இங்கு இருக்கிறோம் என்பதை மலை ஏறும் போது மனதில் கொண்டால் நன்மை பயக்கும்.
வழுக்குப் பாறையை கடந்து மேலே நாம் செல்லச் செல்ல கண்ணனுக்கு விருந்தாக அமைகிறது வனம் .கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம் பச்சை.இம்மலை ஏறும் போது நம் மனதிலிருந்த சங்கடங்கள் எல்லாம் காற்றில் பறந்து நம் மனம் பக்குவமடையும்.
வழுக்குப் பாறை பகுதிகளில் கரடிகள் அதிகம். இம்மலையில் எண்ணற்ற குகைகள் இருப்பதாக இங்கு வழக்கமாய் செல்லும் பக்தர்கள் கூறுகின்றனர்.
வழுக்குப் பாறையை கடந்து சிறிது மேலே சென்றால் சிவநீர் எனப்படும் சுனை ஒன்று உள்ளது. அந்த நீரை பருகப் பருக உடல் ஏனோ பரவசமடையும். அந்த நீரானது நன்கு குளிர்ந்த நிலையில் மிகுந்த சுவையுடன் இருக்கும்.
வெள்ளிங்கிரி மலையின் அனைத்து நீர் சுனைகளின் நீரும் மூலிகைகள் பலவற்றின் மீது பாய்ந்து இயற்கையாக சுத்தப்படுத்தப் பட்டு வருகின்றது.
சிவநீர் - சுனைக்கு சிறிது மேலே சென்றால் பாம்பாட்டி சித்தர் தவமிருந்த இடம் வரும்.இம்மலையில் நடக்கும் போது முன்பு இருந்தது போல் கடினமாக இருக்காது. பாம்பாட்டி சித்தர் தவமிருந்த இடத்தை விட்டு சிறிது தூரம் மேலே சென்றால் பாம்பாட்டி சுனை உள்ளது.
பாம்பாட்டி சுனைக்கு மேலே செல்லச் செல்ல கைத்தட்டி சுனை வரும். அதன் அருகிலேயே ஓர் குகை உள்ளது. அங்கு சென்று பூஜை செய்ய விரும்பினால் செய்யலாம்.

அமர்ந்து
இளைப்பாறுவதற்கு உரிய தகுந்த இடம்
ஆகும் .பொதுவாக இங்கு சில
அன்பர்கள் வரும் போதே சமையலுக்கு
தேவையான பாத்திரங்கள், காய்கறிகள் மற்றும்
தேவையான பொருட்களோடு வந்து சமைத்து சாப்பிடுவார்கள்.
கைத்தட்டி
சுனைக்கு மேலே சென்றால் வெட்ட
வெளியாக இருக்கும். இங்கு மந்தி எனப்படும்
குரங்கு வகைகள் அதிகம் உள்ளன.இந்த வெட்டவெளி நான்காம்
மலையை சார்ந்ததாகும்.
நான்காம்
மலை "ஒட்டர் சித்தர் சமாதி"யுடன் முடிகிறது.ஒட்டர்
சித்தர் என்பவர்தான் கீழே உள்ள முதல்
மலையிலிருந்து நான்காம் மலை முடிவுவரை உள்ள
வழிகளை உருவாக்கியவர் .தன் சிவபணியின் பாதியிலே
உடலை விட்டு ஆன்மா விலகியது.
ஆகையால் அவர் உயிர்துறந்த இடத்தில்
சமாதி வைக்கப்பட்டு உள்ளது.
ஐந்தாம்
மலையானது அருமையான பசுமைக்காடுகள் நிறைந்த வனத்தை தன்னகத்தே
கொண்டது. ஐந்தாம் மலையின் முடிவில் தான்தோன்றி பிள்ளையார் உள்ளது.
ஆறாம்
மலையில் இருந்து மேலே செல்லும்
பாதை வழுக்கும் தன்மைகொண்டது. இது இரத்தம் உறிஞ்சும்
அட்டைகள் அதிகமாக காணப்படுகிறது.அதனால்
பாதையில் மிக கவனமாக செல்ல
வேண்டும். ஆறாவது மலையில் ஆண்டி
சுனை உள்ளது. இங்கு பொதுவாக
அனைத்து பக்தர்களும் நீராடுவது வழக்கம்.
ஆறாம்
மலையின் முடிவிற்கு செல்வதற்கு முன்னரே ஆறாம் மலையிலிருந்து
"ஜடா முடி"யான ஏழாம் மலையின்
தோற்றம் கண்ணுக்கினிய காட்சியாகும்.
ஆறாம்
மலையின் முடிவில் அர்ஜுனனின் தவக்குன்று உள்ளது.சீதை வனமும்
ஆறாம் மலையில் உள்ளது.சீதை
வனத்தினுள் கிருஷ்ணன் குகையும் உள்ளது.
வெள்ளிங்கிரி
மலைகளில் மிகவும் சக்தி வாய்ந்த
மூலிகைகள் உள்ளன.இந்த மூலிகைகளை
பற்றி வெள்ளிங்கிரி மலைவாழ் மக்களுக்கு நன்கு
தெறியும்.
அர்ஜுனனின்
தவக்குன்று தியானம் செய்ய உகந்த
இடம்.இங்கு அமர்ந்து முழுமையாக
இறையன்பில் தியான வடிவில் அமர்ந்தால்
காற்றிலே மிதக்கலாம் என்பது சில சிவனடியார்களின்
நம்பிக்கை.
ஐந்தாம்,
ஆறாம் மலைகள் சொல்லப்போனால் முதல்
மலையை தாண்டிவிட்டாலே குளிர் இருக்கும்.நடந்துகொண்டே
செல்லும் போது உடல் சூடு
ஆதலால் குளிராது.ஆனால் ஓரைந்து நிமிடங்கள்
ஓய்வெடுத்த பின் குளிரினை உணர
முடியும்.
மேலே
சிறிது தூரம் ஏறினால் ஏழாம்
மலையினை அடையலாம்.ஏழாம் மலையின் முகப்பில்
ஓர் விநாயகர் கோவில் உள்ளது.அந்த
விநாயகர் கோவிலின் வலப்புறம் உள்ள சிறு குகையில்
மனோன்மணி திருக்கோவில் உள்ளது.சிறிது அருகிலே
வெள்ளிங்கிரி ஆண்டவர் சுயம்பு லிங்கமாய் காட்சியளிக்கிறார்.ஏழாம் மலையின் உச்சியை
அடைய அடைய கடுங்குளிராக இருக்கும்.தரிசனம் முடித்துவிட்டு இறங்கும்
வழியில் தீபப்பாறை உள்ளது .மீண்டும் வந்த
வழியிலேயே பயணித்து அடிவாரம் அடைந்தால் மிகுந்த மனத்திருப்தியுடன் வீடு
செல்லலாம்.
ஓம் நமச்சிவாய
//...ஏற ஏற மூச்சிறைத்து களைப்புறுவோம். மனதில், எங்கடா அந்த விநாயகர் கோவில் இருக்கு ? இன்னும் முதல் மலையே முடியலையா?
ReplyDeleteமனதில் தோன்றியதை அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். சென்ற வாரம் முதல் முறையாக வெள்ளியங்கிரி சென்றிருந்தேன். இரவு ஏறத் தொடங்கினோம். என்னால் முதல் மலையில் பாதிதூரத்தைக் கூட கடக்க முடியவில்லை. அப்பனின் மேல பாரத்தைப் போட்டுவிட்டு கீழிரங்கி விட்டேன். வருத்தமாக இருக்கிறது. அடுத்தமுறை அவன் அருளால் தரிசனம் பார்க்க முடியுமென நம்புகிறேன்.
மூன்று வருடமும் சிறப்பான பயணமாக அமைந்தது இன்னும் பல வருடங்கள் செல்ல ஆர்வத்துடன் உள்ளேன் ........
ReplyDelete