குதம்பைச் சித்தர் பாடல்கள்

பூரணம் கண்டோர் இப்பூமியிலே வரக்
காரணம் இல்லையடி – குதம்பாய்
காரணம் இல்லையடி.

பூரணம் – முழுமை .

மனிதன் இவ்வுலகில் பிறப்பதர்க்கு காரணம், முற்பிறவியில் முழுமை பெறாமையே.

ஓங்காரம் நீங்கரப் பூரணம் கண்டோர்க்கு
சாங்காரம் இல்லையடி- குதம்பாய்
சாங்காரம் இல்லையடி.

சாங்காரம்- சாவு

ஓம் யென்னும் அட்சரத்தை உண்மை உணர்ந்து ஓதியவன், சாவை வெல்வான்.

அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினை
பிண்ட்த்துள் பார்ப்பாயடி- குதம்பாய்
பிண்ட்த்துள் பார்ப்பாயடி.

Download this as pdf  

அண்டம்- உலகம் பிண்டம்- உடம்பு

இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான். நம் உடலிலும் இருக்கின்றார்.

எங்கும் நிறைந்தே இருக்கின்ற சோதியை
அங்கத்துள் பார்ப்பாயடி- குதம்பாய்
அங்கத்துள் பார்ப்பாயடி.

அங்கம்- உடம்பு

இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான். ஆகவே உன் உடம்பில் இருப்பவனை, உன்னை அறிந்து உற்று நோக்கு.

தீண்டா விளக்கினைத் தெய்வக் கொழுந்தினை
மாண்டாலும் போற்றிடுவாய்- குதம்பாய்
மாண்டாலும் போற்றிடுவாய்.

மாண்டால்- செத்தால்

யாராலும் தொடப்படாத போது, விளக்கு எவ்வளவு நிலையாக எரிகின்றதோ, அந்த நிலையான தெய்வ கொழுந்தை இறப்பினும் தொழுவாய்.
Download this as pdf  

பக்தி சற்றில்லாத பாமர பாவிக்கு
முக்தி சற்றில்லையடி- குதம்பாய்
முக்தி சற்றில்லையடி.

பக்தி சற்றும் இல்லாத பாமரனுக்கு முக்தி யேது?.

மாணிக்க குன்றிர்க்கு மாசற்ற ஸோதிக்கு
காணிக்கை நல் மனமே- குதம்பாய்
காணிக்கை நல் மனமே.

இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் இறைவனால் ஆக்கப்பட்டவை. அகவே நாம் எதை இறைவனுக்கு படைத்தாலும், ஈடு ஆகாது. நல்ல மனம் ஒன்றே இறைவனுக்கு செலுத்த முடிந்த காணிக்கை பொருள். 

Download this as pdf  

Comments

Popular posts from this blog

திருமூலரின் அணு ஞானம்

சிவவாக்கியர் பாடல் (தமிழில் வரிகளுடன்)